சுரக்காய் வேர்கடலை குழம்பு Print
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Thursday, 27 September 2012 08:57

 

 

தேவையான பொருட்கள்

சுரக்காய்              - 1 சின்னது
மிளகாய் தூள்     - 1   டேபிள் ஸ்பூன்
மஞ்சள் , உப்பு    - சிறிதளவு
புளி           -  சிறிய உருண்டை  அளவு
வேர்கடலை       - 100 கிராம்
எண்ணெய்         - தேவையான அளவு
பூண்டு                 -  3 துண்டுகள்

உப்பு                    - தெவையான அளவு

தக்காளி              -  2

சாம்பார் வெங்காயம்   - 3
மற்றும் கடுகு , கருவேப்பிலை , கொத்தமல்லி

செய்முறை

சுரக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்துக்கொள்ளவும்.
வேர்கடலையை தீயாமல் வறுத்துக்கொள்ளவும் , பிறகு வேர்கடலையின் தோலை நீக்கிவிட்டு   ஒரு தக்காளி, மிளகாய் தூள் மஞ்சள் தூள் , பூண்டு    
வேர்க்கடலை ஆகியவற்றை கெட்டியாக நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையானது ரவை பதத்தில் இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி , கடுகு போட்டு வெடிந்ததும்,அதில் வெங்காயத்தையும் சுரக்காயையும் சேர்த்து வதக்கவும் பின் அதில்அரைத்த கலவையுடன்  உப்பு சேர்த்து
கொதிக்கவிடவும் இறுதியாக புளிக்கரைசலை சேர்த்து கொதிக்கவிட்டு கருவேப்பிலை கொத்தமல்லி  சேர்த்து பரிமாறவும் .இந்த சாம்பார் கெட்டியாக கூட்டைப் போல இருந்தால் சுவையாக இருக்கும் அதனால் அதிக நீர் சேர்க்க வேண்டாம்

Last Updated on Friday, 28 September 2012 16:29