Home FAQS
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் PDF Print Email
Written by   
சனிக்கிழமை, 11 டிசம்பர் 2010 15:04

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பொதுவான கேள்விகள்

கே: தமிழ் டைஜஸ்ட் திட்டத்தில் எத்தனை வகையான பாடத்திட்டங்கள் உள்ளன?

ப : பேசிக், இன்டர்மீடியட் மற்றும் அட்வான்ஸ்டு ஆகிய மூன்று வகையான வேறுபட்ட பாடத் திட்டங்களை தமிழ் டைஜஸ்ட் அளிக்கிறது.

 

கே: ஒவ்வொரு பாடத் திட்டத்திலும் மொத்தம் எத்தனை நிலைகள் உள்ளன?

ப : தமிழ் டைஜஸ்ட் இணைய தளத்தில் மொத்தம் 16 நிலைகள் உள்ளன. பல்வேறு நிலைகள் பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை: பேசிக் (5 நிலைகள்), இன்டர்மீடியட் (5 நிலைகள்), அட்வான்ஸ்டு (6 நிலைகள்).

 

கே: தமிழ் டைஜஸ்ட் ஆன்லைன் ஸ்டீமிங் வெப் சைட்டில் வீடீயோ பாடத்திட்டம் இயங்க ஆரம்பிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

ப: பொதுவாக ஒரு சில நொடிகள். தமிழ் டைஜஸ்ட் வீடியோ ஸ்டீமிங் உங்கள் கம்ப்யூட்டர் எவ்வளவு வேகமாக உள்ளதோ அந்தளவு வேகமாக இதுவும் இயங்கும். இது உங்கள் கம்ப்பூட்டர் மற்றும் இணையத் தொடர்பைப் பொருத்தது.

 

கே: நான் தொடர்ந்து பாடத்தை கவனித்துக்கொண்டிருக்கும்போது, ஸ்டீமிங் வீடியோ ஸ்டட்டர் ஆதல், ரீ பஃப்பர் ஆதல் அல்லது எதிர்பாராதவிதமாக நழுவுதல் ஆகியவை ஏற்படுகின்றன?

ப :  உங்கள் இணையத் தொடர்பு போதுமான அளவு வேகம் இல்லாமல் இருந்தால், ஸ்டீமிங் மூவிகள் ஸ்டட்டர் ஆகும் அல்லது பிளேபேக் செய்யப்படும்போது ரீ பஃபர் ஆக வேண்டியிருக்கும்.கீழ்க்கண்டவாறு செய்தால், பிளேபேக் செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ளலாம் :

உங்கள் இணையத் தொடர்பு வேகத்தை அதிகரிக்க, அப்போது இயங்கிக்கொண்டிருக்கும் வேறு வீடியோ, பாட்டு, ஆன்லைன் விளையாட்டு  அல்லது உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இன்டர்நெட் கனெக்ட் ஆகியுள்ள ஆன்லைன் ஃபைல் பகிர்வு அப்ளிகேஷன் ஆகியவற்றைக் குறைத்தல்.

உங்கள் கம்ப்யூட்டரை வைஃபை மூலம் இணைப்பதை விட ஈதர் நெட் கேபிள் மூலம் இன்டர்நெட் ரூட்டருடன் இணைக்கவும்.

நீங்கள் கம்ப்யூட்டரை வைஃபை மூலம் இணைத்திருந்தால், வலுவான ஒயர்லெஸ் சிக்னலைப் பெறுவதற்கு வசதியாக வைஃபை ஹப் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

பான்ட்வித் பிரச்சினைகள் தொடர்பாக உங்கள் இன்டர்நெட் சேவைகள் வழங்கும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.

 

கே : என் கம்ப்யூட்டரில் நான் வீடியோ பாடத்திட்டங்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது வீடியோவின் தரம் மோசமாக இருந்தால், நான் என்ன செய்ய வேண்டும்?

ப: முதலில், நீங்கள் பிராட்பான்ட் தொடர்பு பெறுவதை  உறுதி செய்துகொள்ளுங்கள். டயல் - அப் தொடர்பு வேண்டாம். அந்த பான்ட்வித்தில் வேறு எந்த விதமான சாதனங்களோ, அல்லது மென்பொருள்களோ உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக்கொண்டிருக்கவில்லை என்பதை சரிபாருங்கள். அதிகத் தரம் வாய்ந்த வீடியோவைக் காண குறைந்தது 3.0-Mbps வேகம் கொண்ட தொடர்பு மற்றும் தடங்கலில்லாத பேசிக் தரம் உள்ள வீடியோக்களுக்கு குறைந்தது, 1.5-Mbps-ஐ நாங்கள் பரிந்துரைக்கிறோம்

உங்கள் கம்ப்யூட்டர் திரையில் ஒன்றும் தெரியாவிட்டாலோ, வீடியோ தெரியாமல் வெறும் பச்சை அல்லது வேறு நிறங்கள் காணப்பட்டாலோ, கணினியின் வீடியோ கார்ட் டிரைவர்களை அப்டேட் செய்ய வேண்டும். மேலும் அதிக விவரங்கள் பெற கம்ப்யூட்டரின் வீடியோ கார்ட் தயாரிப்பாளரை தொடர்பு கொள்ளவும்.

 

கே: ஒரே வீடியோவை உடனுக்குடன் எத்தனை முறை பார்க்கலாம் என்பதற்கு ஏதாவது வரைமுறைகள் உள்ளதா?

ப: இல்லை. நீங்கள் கால வரையறையற்ற இன்டர்நெட் தொடர்பு பெற்றிருக்கும்பட்சத்தில், உங்கள் இஷ்டப்படி எத்தனை முறை வேண்டுமானாலும், எவ்வளவு குறுகிய கால இடைவெளிகளில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

 

கே: தமிழ் டைஜஸ்ட் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்வது எப்படி?

ப: அது மிகவும் சுலபம். வீடியோ பாடத் திட்ட மெட்டீரியல்களைப் பெற உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி உங்கள் முந்தைய அக்கவுன்ட் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்யவும். உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் எங்களிடம் ஏற்கெனவே இருப்பதால், நாங்கள் வெறும் கிளிக் செய்தாலே அது ரீஸ்டார்ட் ஆகிவிடும்.

 

பணம் செலுத்துவது பற்றிய கேள்விகள்

கே : எத்தனை வகையான சந்தா சேவைகள் உங்களிடம் உள்ளன?

ப : தமிழ் டைஜஸ்ட் வாடிக்கையாளர்கள் “மாத” அல்லது “வருட” சந்தாவில் எதை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

 

கே : மாத சந்தா பிரிவில் ஒவ்வொரு மாதத்திலும் எந்த நாளில் தானாகவே பில் தொகை தானாகவே சார்ஜ் செய்யப்படும்?

ப : தமிழ் டைஜஸ்ட்  மாத சந்தா பிரிவில் ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில பணம் செலுத்தப்பட்டதோ அதே தேதியில் மாதம் ஒரு முறை பில் தொகை சார்ஜ் செய்யப்படும். அதாவது, நீங்கள் முதலில் 23ஆம் தேதி பணம் செலுத்தியிருந்தால், அதையடுத்த ஒவ்வொரு மாதமும் அதே 23ஆம் தேதியில் பில் தொகை தானாகவே சார்ஜ் செய்யப்படும்.

 

கே: வருட சந்தா பிரிவில் வருடத்தின் எந்த நாள் பில் தொகை தானாகவே சார்ஜ் செய்யப்படும்?

ப : தமிழ் டைஜஸ்ட் சந்தாவின் முதல் முதலில் நீங்கள் பணம் செலுத்திய அதே நாளில் அடுத்தடுத்த வருடங்களிலும் பில் தொகை சார்ஜ் செய்யப்படும்.  உதாரணமாக, நீங்கள் முதலில் மே மாதம் 23ஆம் தேதி பணம் செலுத்தியிருந்தால், அடுத்தத்த வருடங்களிலும், அதே மே 23ஆம் தேதி பில் தொகை தானாகவே சார்ஜ் செய்யப்படும்..

 

கே: மாத, வருட, பில்லிங் என்றால் என்ன?

ப : தமிழ் டைஜஸ்ட் சந்தா தொகைக்கான பில் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பிரிவுகளின் அடிப்படையில் பணம் செலுத்துவதற்காக அததற்கான நேரங்களில் தானாகவே சார்ஜ் செய்யப்படும்.

 

கே: என் பில் தேதியை நான் மாற்றிக்கொள்ள முடியுமா?

ப : தமிழ் டைஜஸ்ட் உறுப்பினர்கள் தாங்கள் முதல் முதலில் பணம் செலுத்திய அதே நாளில்தான் எப்போதும் அடுத்த பில் தொகை சார்ஜ் செய்யப்படும். அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தமிழ் டைஜஸ்ட் சந்தாவை கான்சல் செய்துவிட்டு, மீண்டும் நீங்கள் விரும்பும் தேதியில் மீண்டும் இணைந்துகொள்ள வேண்டும்.

 

கே: தமிழ் டைஜஸ்ட் சந்தாவை கான்சல் செய்துவிட்டு, என் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியுமா?

ப: நிச்சயமாக முடியும். மாத சந்தா பிரிவில் எந்த தேதியில் வேண்டுமானாலும் நீங்கள் கேன்சல் செய்துகொள்ளலாம். ஆனால், அப்போது பணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது. தானாகவே சார்ஜ் செய்யப்படும் மாத சந்தா அடுத்த மாதத்திலிருந்துதான் நிறுத்தப்படும். அடுத்து வருடத்திற்கான சந்தாவை கான்சல் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முந்தைய வருடத்திற்குள்ளாகவே செய்துகொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

கே: என்னுடைய பில்லிங் தகவலை நான் எப்படி மாற்றிக்கொள்ள முடியும்?

ப:  உங்கள் அக்கவுன்ட் நிலவரத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அப்டேட் செய்துகொள்ளலாம்.

 

கே: என் அக்கவுன்டில் எப்படி சார்ஜ் செய்யப்படுகிறது? என் பில்லிங் விவரங்களை நான் எங்கே பெற முடியும்?

ப: உங்கள் அக்கவுன்ட் நிலவரப் பக்கத்தில் பில்லிங் நடவடிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

LAST_UPDATED2