Home எங்களை பற்றி

அறிமுகம்

காவ்யா கிரியேடிவ் மீடியா பிரைவேட் லிமிடட், பொழுதுபோக்கு மற்றும் ஊடகங்கள் துறையில் செயல்பட்டுவரும் உயிர்த் துடிப்புள்ள ஒரு நிறுவனம். குழந்தைகளும் பெரியவர்களும் எளிதாகவும் ஜாலியாகவும் கற்றுக்கொள்ளும் முறையில் தமிழில் கல்வி தொடர்பான திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இந்த நிறுவனம் சரவணன் கண்ணன், அருண்மணி பழனி ஆகியோரால் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பதிவேடு சட்டத்தின் கீழ் பிரைவேட் லிமிடட் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவ்யா கிரியேடிவ் மீடியா பிரைவேட் லிமிடட், சென்னை, என்ற பொழுதுபோக்கு நிறுவனம் 2009 மார்சில் தொடங்கப்பட்டது. தமிழ் டைஜஸ்ட், அடிப்படையிலிருந்து, மிகவும் மேம்பட்ட நிலை வரை ஆங்கிலம் மூலமாகத் தமிழ் கற்றுத் தரும். இப்படி ஆன்லைனில் ஒரு மொழியைக் கற்றுத் தருவது இதுதான் முதல் முறை. தமிழ் கற்றுத் தரும் முறை பாரம்பரிய முறைப்படி இல்லாமல், குறுகிய காலத்திற்குள் கற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு வகையான விளையாட்டு மற்றும் பயிற்சிகளின் மூலம் கற்றுக்கொடுக்கும் அணுகுமுறை கொண்டது இது. தமிழ் டைஜஸ்ட் திட்டம் அமெரிக்காவில், நியுஜெர்சியில் உள்ள நியுகன் ஐஎன்சி எனும் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தினால் மார்க்கெட் செய்யப்படுகிறது.

இலக்கு

தமிழ் உரையாடல்கள் மூலம், சுலமான முறையிலும் விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளைப் பயன்படுத்தி தமிழைக் கற்றுக் கொடுக்கும் ஒரு முறையை காவ்யா கிரியேடிவ் மீடியா தமிழ் டைஜஸ்ட் திட்டம் மூலம் உருவாக்கியுள்ளது. சாதாரணமாகக் கற்றுக்கொள்ளும் முறையில் கற்றுக்கொள்ளுமாறு நம் குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல், பொழுதுபோக்கு அம்சங்களைச் சேர்த்து, கற்கும் சூழலை அருமையாக உருவாக்கித் தந்து, இணையம் மூலம் கற்றுக்கொடுக்கும் திட்டம் இது. உங்கள் குழந்தைகளைத் தமிழ் கற்றுக்கொள்வதில் இதில் ஆர்வத்துடன் ஈடுபடச் செய்யலாம். “கனவை நனவாக்குவோம்” என்ற எங்கள் கொள்கை எவ்வளவு உண்மையானது என்பது எங்கள் கற்பிக்கும் முறைகளைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

தமிழ் டைஜஸ்ட் திட்டம் உலகின் பல்வேறு இடங்களில் வாழும் புலம் பெயர்ந்த தனிப்பட்ட தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ இல்லாமல், வேறு இடங்களில் வாழும் தமிழ் பேசும் சமுதாய மக்களுக்காகவும் உருவாக்கப்பட்டது.

மொத்தம் 15 வெவ்வேறு நிலைகளில் உள்ள ஒவ்வொன்றும் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் பாடத்திட்டத்தை ஹை என்ட் டிஜிடல் வீடியோவிலும், எல்க்ட்ரானிக் அல்லது ஹார்ட் காப்பி பயிற்சி புத்தகம் மூலமாகவும் தமிழ் டைஜஸ்ட் திட்டம் வழங்குகிறது.  இந்தப் பாடத் திட்ட முறைகள், எந்தத் தனிப்பட்ட நபர்களுக்கும் (குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ) தமிழ் கற்கும் அனுபவத்தை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள உதவுகிறது. ஆறே மாதங்களில் இதை சாதிக்கலாம். இது முழுவதும் அவருடைய ஆர்வம் மற்றும் கடுமையான உழைப்பைப் பொருத்ததே.

தமிழ் டைஜஸ்ட் திட்ட வெற்றியின் நீடித்திருக்கும் தன்மைக்கு முக்கியமாகத் தேவைப்படும் மூன்று விஷயங்களைக் கண்டறிந்துள்ளது. முதலாவது, ஆக்கபூர்வமான, கல்வி அடிப்படை, உரையாடகள் மூலம் கற்பிக்கும் முறைகள். இரண்டாவது, நிதிக் கடுமையான கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுதல், கடைசியாக, வாடிக்கையாளர்கள் சொல்வதை கவனமாகக் கேட்டு, திட்டத்தை தொடர்ச்சியான மேம்பாட்டுக்காக திறனுடன் அவற்றைப் பயன்படுத்துவது.

நிர்வாகக் குழுவினர்

சரவணன் கண்ணன், அருண்மணி பழநி ஆகியோர் அடங்கிய நிர்வாகக் குழுவினர்தான் காவ்யா கிரியேடிவ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதியான அஸ்திவாரங்கள்.

சரவணன் கண்ணன் - (இயக்குநர் – செயல்பாடுகள் / திட்ட மேம்பாட்டு) சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற திட்டப் பொறியாளர், இவர். அதன் பிறகு, சரவணன் கண்ணன் அமெரிக்காவில், நியுஜெர்சி நகரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், கடந்த 15 வருடங்களாக மென்பொருள் திட்ட மேம்பாட்டுத் துறையில் பணிபுரிந்துவந்தார்.

அருண்மணி பழநி - (இயக்குநர் – க்ரியேட்டிவ் / பிளானிங்): இவர், நிர்வாகக் குழுவின் இன்னொரு பாதி. சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அருண்மணி பழநி, அமெரிக்கவில் கலிஃபோர்னியா நகரில் திரைப்படத் தயாரிப்பில் முதுகலை திட்டப் படிப்பையும் முடித்து, சில ஹாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர், திரைப்பட இயக்குநரும்கூட. தற்போது, தமிழ் சினிமாத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் தமிழ் மொழியையும் அதன் கலாசாரத்தையும் மேம்படுத்தவும் இதன் குறிப்பிடத் தக்க அனுபவம் மிக்க திறன்வாய்ந்த நிர்வாகம், அற்புதமான ஆக்கபூர்வமான திட்ட  மேம்பாடு மற்றும் இனி ஏற்படக்கூடிய அபாரமான மார்கெட் வாய்ப்புகளைப் பற்றிய துல்லியமான தொலைநோக்கு இவைதான் இந்தத் திட்டத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் காரணிகள்.

நான்கு வேறுபட்ட வாடிக்கையாளர் பிரிவினர்களுக்காக உருவாக்கப்பட்டது, தமிழ் டைஜஸ்ட் திட்டம்.  தமிழ் டைஜஸ்ட் ஆன்லைன் சந்தா அல்லது ஒவ்வொரு நிலைக்குமான பயிற்சி புத்தகங்கள் அடங்கிய ஸ்டீமிங் வீடியோ மற்றும் எலக்ட்ரானிக் காப்பி உயர்தர பான்ட் ஆன்லைன்/இணையதளம் திட்டத்தின் மூலம் சந்தாதாரர்களுக்காக ஒலிபரப்பப்படும் கற்பிக்கும் முறையைப் பயன்படுத்தும் முதல் பிரிவினர். பல வாரங்கள் ஒலிபரப்பப்பட்ட தொலைகாட்சி மூலம் ஒலிபரப்பான லைவ் அல்லது பதிவு செய்யப்பட்ட பாடத்திட்டங்கள், வடிவில் உள்ள தமிழ் டைஜஸ்ட் கன்டெட்டைப் பயன்படுத்திக்கொள்ளும் இரண்டாவது பிரிவினர். இவற்றைப் பல்வேறு பிரிவுகளாகவும் தனித்தனியாகப் பிரித்து வைத்துக்கொள்ளலாம். தொலைக்காட்சி மூலம் கற்கும் பிரிவினர், தங்கள் அபிமான உள்ளூர் சானல்கள், சாட்டிலைட் நெட்வொர்க் மூலம், கேட்டுப் பெறப்பட்ட வீடியோக்கள் முதலியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  தமிழ் டைஜஸ்ட் திட்டத்தின் உள்ளடக்கத்தை விளையாட்டுகள் மற்றும் உரையாடல்கள் அடங்கிய பயிற்சிப் புத்தகங்களுடன்  கூடிய பல்லடுக்கு நிலைப் பிரிவுகளில் ஒன்றாகவோ அல்லது தனித்தனியான நிலைகளிலோ டி.வி.டி/வி.சி.டி வடிவில் வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய தனிப்பட்ட வாடிக்கையாளர்கள், மூன்றாவது பிரிவினர். மேற்குறிபிடப்பட்ட பல்வேறு நிலைளைப் பயன்படுத்திக்கொள்ள சந்தா முறையையோ அல்லது ஸ்மார்ட் ஃபோன்கள் (ஆப்பிள் ஐஃபோன், பிளாக்பெர்ரி முதலிய) மூலமாகவோ டிஜிட்டல் வீடியோ கன்டென்ட் மற்றும் பயிற்சிப் புத்தகங்களைப் பார்க்கவோ அல்லது பதிவிறக்கம் செய்துகொள்ளவோ செய்யலாம்.

தமிழ் டைஜஸ்ட் திட்டத்திற்காகக் கற்பிக்கும் முறைகள் மற்றும் பாடத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கடுமையான ஆராய்ச்சிகளுக்குப் பின் கண்டறியப்பட்ட இந்த முறைகள் இந்தியாவில், சென்னையில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பின்பற்றப்பட்டுவருகின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலருக்கும் வேடிக்கையும் சுலபமான கற்கும் முறைகளும் அடங்கிய இந்தத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமையும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் தமிழில் படிக்க, பேச அல்லது எழுதத் தெரியாத பெரியவர்களும்கூட இந்த கல்வித் திட்டத்தைப் பயன்படுத்தி தமிழைக் கற்றுக்கொள்ள முடியும்.


ஒரு வருட முடிவில் தமிழ் டைஜஸ்ட் திட்டம் லாபம் ஈட்டத் தொடங்கும். அதோடு, அடுத்த சில வருடங்களில், தொடர்ந்து அதன் விற்பனையில் ஏற்றம் காணப்படும்.  மார்க்கெட்டிங் வியூகம், தொலைகாட்சி, ஆன்லைன் மீடியா, வாய்வழி விளம்பரங்கள், கல்வி நிறுவனங்கள், அமேசான், ஈ பே போன்ற ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனங்கள், உலகின் பல இடங்களில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கங்கள், தமிழ் சமுதாய அமைப்புகள், நூலகங்கள், தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் மொழி சம்பந்தப்பட்ட பிற அமைப்புகள் மற்றும் குழுக்கள் மூலமாக இது சாதிக்கப்படவுள்ளது.