Home News Articles நினைவுப்பரிசு
நினைவுப்பரிசு PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Sunday, 09 December 2012 07:40

குமுதம், மற்றும் குங்குமத்தில் ஒரு பக்கக் கதைகள் எழுதிவரும்  எழுத்தாளர்களின் கதைகளை தேர்வு

செய்து அதை உருது மொழியில் மொழிபெயர்பு செய்து சிறுகதை தொகுப்பு நூலாக உருது மொழி வாரியம் வெளியிட்டிருந்தது. 29-02-12 அன்று சென்னை பல்கலைக்கழக்த்தில் எழுத்தாளர்களை அழைத்து பாராட்டியதோடு நினைவு பரிசும் வழங்கினார்கள்.

 

இதுவரை முகம் பார்க்காமல் படைப்புகளை மட்டுமே பார்த்து வந்த எனக்கு ஒவ்வொரு எழுத்தாளர்களையும் நேரில் சந்திக்க கிடைத்த நல்ல வாய்ப்பாகவே அனைவருக்கும் அமைந்தது.

 

எழுத்தாளர்கள் எஸ்.ராமன், கிருஷ்ணபஞ்சு, தமிழழகன், போளூர் சி.ரகுபதி, நா,கி பிரசாத், வேலூர் ராம்குமார், சுமதி சண்முகசுந்தரம் கூடவே ஐரேனிபுரம் பால்ராசய்யா ஆகிய நானும்.

 

எழுத்தாளர்கள் சுபாகர் வரவில்லை அவருக்குப்பதிலாக நினைவு பரிசை அவரது தம்பி பெற்றுக்கொண்டார். சேலம் செல்வராஜா, குருபிரசாத், விட்டல் ஆகிய எழுத்தாளர்கள் வரவில்லை அவர்களின் நினைவுப்பரிசுகளை தமிழழகன் மற்றும் நா.கி.பிரசாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

 

எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் கூட்டம் முடிந்ததும் சந்தித்து பேசியது பொன்னான தருணங்கள்.

 

நல்ல சந்திப்புகளை விட்டு பிரிய முடியாத அவஸ்தையில் கைபேசி எண்களையும் முகவரிகளையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றோம்.

 

மறக்க முடியாத சந்திப்பு

 

நண்பர்களே...இதுபோல் நாமும் ஒருநாள் சந்திப்போமா?

 

Last Updated on Sunday, 09 December 2012 07:43