Home
அறிவான பூ PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Monday, 03 December 2012 05:27

குழந்தை என்பது ஆண்டவன் கொடுக்கும் வரம்.அதிலும் பெண் குழந்தைகள் தவமிருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அரிய  பொக்கிஷம்.  பிறக்கும் போது எந்த குழந்தையும் பொது அறிவை வளர்த்துக் கொண்டு பிறப்பதில்லை அது வளரும்போது ,பெற்றோர்களால் வளர்த்து விடப்படுகிறது. உங்கள் குழந்தை அதிக புத்திசாலி ,வியக்கவைக்கும் திறமைசாலி என்று பிறர் பாராட்ட, புத்திசாலியான ஒரு குழந்தையை சமுதாயத்திற்கு கொடுக்க  பெற்றோர்கள் கொடுக்கும்  விலை அளவுக்கதிகமானது அந்த விலையை எதை கொடுத்தும் ஈடு செய்ய இயலாது.

குழந்தை பிறந்த பிறகு அதை வளர்க்க போராடுபவர்களுக்கிடையே,கருவை சுமக்க ஆரம்பித்த நாளில் இருந்தே சில தாய்களின் தியாகம் துவங்கிவிடுகிறது.அவர்களுக்கான தேவையை கவனிப்பதை விட கருவறைக்குள் சுவாசித்துக் கொண்டிருக்கும் தன் ஜீவனை எண்ணியே அவர்களின் ஒவ்வொரு அசைவும் இயங்குகிறது. இனிப்பு சாப்பிடக்கூடாது உடம்பு குண்டாகிவிடும் அதனால் குழந்தை பிறப்பது கடினமாகிவிடும் என்று யாராவது போகிறபோக்கில் விளையாட்டாக சொன்னாலும் அன்றிலிருந்து இனிப்புக்கு தடை தான் இப்படி  அறுசுவை உணவை குறைத்து பத்திய உணவுக்கு மாறிவிடுகிறாள்.  அதற்க்கு பிறகு போதிய உணவில்லாததால் குழந்தையின் பசிபோக்கி தான் பட்டினிகிடக்கிறாள். அடித்து போட்டது போல அசதியாக இருந்தாலும் கருவில் இருக்கும் குழந்தை சோம்பேறியாக மாறிவிடும் என்று எண்ணி  தூக்கத்தை தூர வீசுகிறாள்.நல்லவற்றை கேட்க்க வேண்டும் , நல்லவற்றை செயல்படுத்த வேண்டும் , நல்லவற்றையே பேசவேண்டும் இன்னொரு உயிரை உலகிற்கு உரியதாக தயார்ப்படுத்த அவள் தன்னை தருகிறாள்.   குழந்தை பூமிக்கு வந்து சுவாசிக்க ஆரம்பித்த உடன் அன்றிலிருந்து அது வளர்ச்சியை எட்டும் வரை தாயும் அதனுடனேயே சேர்ந்து வளர்கிறாள்.எல்லா தாயும் இப்படி ஒரு நிலையில் தான் தன் சிசுவை வளர்கிறாள் ஆனால்.................

இன்றைய நிலையில் பணத்தின் பிடியில், நேரத்தின் நிர்பந்தத்தில் தாய்மார்கள் சிக்கி கொண்டிருப்பதால், நல்ல திறமையான குழந்தைகளை இந்த சமூகம் சிறிது சிறிதாக இழந்துக் கொண்டிருக்கிறது.இளைய தலைமுறையினரை சீரான சமுதாயத்தை உருவாக உகந்தவர்களாக தயார்படுத்த தூண்டுகோலாக இருக்க வேண்டிய பெற்றோர்கள், நேரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு, பிள்ளையை கவனிக்கும் பொறுப்பிலிருந்து நழுவுகிறார்கள்.அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லாமல்,பசி அறிந்து  சோறூட்ட, தீய பழக்கத்தை வளரவிடாமல் தடுத்து, நற்பண்புகளை கற்ப்பித்து, உரிய நேரத்தில் தூங்க வைத்து, பாசத்திற்காக ஏங்க விடாமல் பக்கத்திலிருந்து பரிவுக்காட்ட பரிசத்தை, நேசத்தை அன்னியோன்யத்தை பகிர தாயில்லாமல் தவிக்கும் குழந்தைகள் நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் பெருகிவருகிறது. தொலைக்காட்சியில் வரும் பொம்மை படங்கள் உறவாகிறது. வீடியோ கேம்ஸ் விருந்தாகிறது. தரமானதா,சரியானதா என்று பாகுப்படுத்த தெரியாமல் ஆபாசமான 'பன்சு'டயலாக்குகள்                பரிட்சயமாகிவிடுகின்றன. வேலை மேல் அக்கறைகொண்டு தாய் பறக்க, தீய பழக்கத்திற்கும் மன உலைச்சலுக்கும் குழந்தை ஆளாகிறது.அந்த காலக்கட்டத்தில் வேலையை தூக்கி எரிந்து விட்டு தீர்வு தேடி  மருத்துவமனைக்கும்  , கோயில்,சாமியாரிடமும் போய் நின்று அலுத்து புலம்பும் நிலையை ஏன் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிஞ்சின் மனம், செயல்,தேவை  அம்மாவுக்கு தெரியுமா ? ஆயாவுக்கா?  அம்மாவின் தேவை எவ்வளவு என்பதை தெரிவிக்கவே இந்த கட்டுரை.

அறிவான பூ :s. பவித்ரா

வயது : நான்கு

கல்வி : LKG ,

பெற்றோர்கள்  : சத்தியநாராயணன் ,துர்காலக்ஷ்மி

2012-06-27-202.jpg

கருப்போ சிகப்போ ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளென்றால் எல்லோருக்கும் கொஞ்சம் பிரியம் அதிகமாக இருக்கும். வித விதமாக் ஆடை உடுத்துவதால் இருக்குமோ என்று  எண்ணலாம்  அதுமட்டுமல்ல அதனுடைய மழலையும் சற்று கூடுதலாகவே  ஈர்க்கும். வழியில் போகும் ஒருவரை ஆண் குழந்தை மாமா என்று கூப்பிடும் போது முகத்தில் மலர்ச்சி ததும்பும் அதே மொழியை பெண் குழந்தை கூப்பிட்டால் அதை வாரி எடுத்து உட்சி முகராதோர் இருக்க முடியாது    அப்படி இனிக்கும் மழலை மொழியில் கொஞ்சும் தமிழில் பேசும் குழந்தை தான் பவித்ரா. எல்லா குழந்தையை போலவும் இதுவும் ஒரு குழந்தை அவ்வளவு தான் என்றால் இந்த பக்கத்தில் பவித்ராவின் பெயர் இடம்பிடித்திருக்காது. நான்கு வயது கூட நிரம்பாத குழந்தை.

பவித்ரா வயதுடைய குழந்தைகளெல்லாம் பாட்டி தாத்தா என்ற உறவுகளையே தட்டுதடுமாறி  சொல்லும்போது பவிதராவின் பொது அறிவு சற்று வியக்கவைக்கிறது. அதன் பின்புலத்தில் அவளது பெற்றோரின்
முயற்சியிருக்கிறது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரை  சொல் என்று கேட்டால்,ஓடிக்கொண்டே விளையாடியப்படி இருபது தலைவர்களின் பெயர்களை சொல்கிறாள்.உலக அதிசயங்கள் ஏழள்ள பதினெட்டு இடங்களை குறிப்பிடுகிறாள்.அவளது அம்மா தமிழ்நாடு என்று சொன்னவுடன்  சென்னை என்கிறாள்.குஜராத் என்றதும் காந்திநகர் என்று சொல்லிவிட்டு ஓடுகிறாள் இப்படி இருபத்தைந்து  மாநிலங்களின் தலை நகரங்களை  தவறில்லாமல் சொல்கிறாள்.

 

2012-11-27-659.jpg

நம்ம நாட்டின் பணத்தை  என்ன சொல் பயன்படுத்தி குறிப்பிடுவார்கள் என்று கேட்டாலே நிறைய குழந்தைகளுக்கு தெரியாது  ஆனால் பவித்தாரவோ பதினெட்டு நாடுகளின் பணத்தின்(Foreign currency)  பெயர்களை தெரிந்துவைத்திருக்கிறாள்.

விஜய் விக்ரம் உருவத்தை டிவியில் பார்த்து அவர்களை அடையாளம் கண்டுக்கொண்டால் அதில் ஆச்சர்யம் இல்லை ஆனால் சுவற்றில் வைத்துள்ள புகைபடத்தில் இருக்கும் அறிஞ்சர் அண்ணாவை அறிந்து அடையாளம் சொல்வதோடு மட்டுமல்லாமல்  இருபது தேசிய தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறாள். அதுமட்டுமல்ல விளையாடும்போதும் ,உண்ணும்போதும் என்று தன் விளையாட்டு நிமிடங்களை பொது அறிவை வளர்த்துக்கொள்ள பவித்ரா செலவிடுகிறாள்.அதனால் தான் ' டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாருமில்ல விளையாடுவோமா உள்ளே' என்று கபடற்று விளையாடும் வயதில் சோலார் சிஸ்டம் , புகழ் பெற்ற இருபது பெண்மணிகள் ,எட்டு சேடிலைட்ஸ் ,வரலாற்று புகழ்பெற்ற முப்பது இடங்கள் , பதினைந்து விஞ்ஞானிகளின்  பெயர்கள் போன்றவற்றையும் பவித்ரா அறிந்து வைத்துள்ளாள்.

 

DSC01274.JPG

நான்கு வயது கூட நிரம்பாத குழந்தை அது தன்னாலேயே எல்லாம் கற்றுகொள்ளும் என்பதை நம்பிவிட முடியாது ஏனெனில் எல்லோருக்கும் தெரியும் ஒரு  குழந்தைகளின் திறமைக்கு காரணம் பரம்பரை மரபணு மட்டுமல்ல அதற்கு பின்னால் அம்மாவோ ,அப்பாவோ, ஆசிரியரோ யாரோ  ஒருவரின் உழைப்பும்  மறைந்திருக்கிறது.பவித்தராவின்  திறமைக்கு பின்புலமாக இருப்பவர் அவளது பெற்றோர்கள்  தான்.
பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் ஆனால் நல்லொழுக்கத்தை உரிய வயதில் கற்றுக்கொடுத்தால் மட்டுமே பிள்ளை நன்றாக வளரும் என்பதற்காக   தான் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் பணிக்கு முழுக்கு போட்டு அவருடைய மகளுக்கு மட்டும் ஆசிரியராக இருக்கிறார்.இவர்கள் வீட்டில் தொலைக்காட்சி கண்சிமிட்டுவது, செய்தி சொல்ல மட்டும் தான்.தொலைகாட்சி தொடர் , சினிமா செய்தி , திரைப்படம் ,கார்டூன் படம் என்பதெல்லாம் என்ன என்று கூட அவளுக்கு தெரியாது.

எல்லா அம்மாவாலும் ஆசிரியையாகவும் அவதாரமெடுக்க இயலாது ஏனென்றால் காலத்தின் கட்டாயம்,  தான் பெற்ற பச்சிளம் குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு பணம் தேட ஓட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். குடும்ப தலைவன் குடிகாரனாக மாறிவிட பிள்ளையின் பசிபோக்க வேலைக்கு போக வேண்டியது தாயின் கட்டாயம். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களை யாரும் குறை சொல்ல முடியாது, ஏனெனில் பண்பை விட அங்கு பசி வென்று விடுகிறது ஆனால் கை நிறைய கணவன் சம்பாதிக்கும்போது, குழந்தையை அந்நியரிடம்  வளர்க்க விட்டுவிட்டு,பணம் தேட ஓடுவது தேவையா? பவித்ராவின் தாயை போலவே ஒவ்வொருவரும்  சிந்தித்தால் நாளைய சமுதாயத்திற்கு வித்தாகுமே !

நல்ல விதையை தூவினால் மட்டும்  அறுவடை சிறந்து விடாது,அதற்க்கு  நீர் பாய்ச்சி , உரமிட்டு, பூச்சி அரிக்காமல் மருந்து தெளித்து , வெயில் மழை என்ற இயற்கை செல்வதை அளவோடு பயன்படுத்த பாதுகாப்பளித்து,வளரவிடாமல் தடுக்கும் தீய  பயிரை நீக்கி, திருடர்களிடமிருந்து காக்க காவலிருந்து  இத்தனை பாடுபட்டால் தானே அறுவடை சிறக்கும்.

 

2012-07-22-321.jpg

பயிருக்கே இத்தனை பாதுகாப்பு தேவை என்றால்!  உயிருக்கு ? யோசியுங்கள் .........................

Last Updated on Monday, 03 December 2012 12:18