Home Poetry இறந்த பின் வாழ்வோம்
இறந்த பின் வாழ்வோம் PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Wednesday, 14 November 2012 06:11

எனக்கான
சரித்திரம்
எழுதப்படும்போது

உன்னை
பிரித்து விட்டு
யாரும் எழுதமுடியாது

இந்த
ஒரு காரணத்திற்காகவாவது
என்னை
காதலித்து விடு

சும்மா  
வாழ்ந்து
இறந்து விடாதே

நான்
இறந்த பின்
உன் நினைவு
அழிந்து விடும்

ஒரு முறை
சொல்லி விட்டு போ
காதலிப்பதாய் ....

இறந்த பின்
நீயும் , நானும்
வாழ்வோம்

Last Updated on Wednesday, 14 November 2012 06:18