Home Poetry விரிச்சோடிய சொர்க்கம்
விரிச்சோடிய சொர்க்கம் PDF Print E-mail
Written by கவிபெரியசாமி   
Friday, 19 October 2012 13:39

அய்யர் மலையில்
ஆர்பரிக்கும்
குரங்குகள்

காவிரி
ஆற்றில்
குளித்தெழும் மீன்கள்

வயல்காட்டில்
வலைக்குள் புகும்
நண்டுகள்

நெல் வயலில்
கதிரறுக்கும்
பெண்கள்

சொர்கத்திற்கு
பின்
எங்கள் கிராமம்

எல்லாம்
நீ
அருகில் இல்லாதபோது
விரிச்சோடின