Home Short Stories விவாகரத்து
விவாகரத்து PDF Print Email
Written by   
வியாழக்கிழமை, 04 அக்டோபர் 2012 08:30
There are no translations available.

சாலையில் ஓரத்தில் மயக்கமாகி விழுந்த சரண்யாவை பலரும் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தார்கள். அவளோடு துணைக்கு வந்த சரண்யாவின் அண்ணி கயல்விழிக்கு  மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டமானாள். இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இளமதியன் சட்டென்று வண்டியை நிறுத்தி ஒரு ஆட்டோவை அழைத்து மயங்கி கிடந்த சரண்யாவையும் கயல்விழியையும் ஏற்றி அருகிலிருந்த ஆஸ்பத்ரிக்கு அனுப்பி விட்டு அவனும் பின் தொடர்ந்தான். ஆஸ்பத்ரியில் சரண்யாவை அட்மிட் செய்துவிட்டு வெளியில் பதற்றத்தோடு நின்ற கயல்விழியிடம் ஆறுதல் சொன்னான். ``பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல, அவங்களுக்கு லோ சுகர். அடிக்கடி இப்பிடி மயக்கம் போட்டுடுவாங்க, வெளியே போறதா இருந்தா கையில எப்பவும் சாக்லெட் வெச்சுக்குங்கன்னு பல தடவ சொல்லியிருக்கிறேன், கேக்கறதில்ல!’’ ``என் அண்ணிய உங்களுக்கு தெரியுமா? நீங்க அவங்களுக்கு உறவா? இல்ல நட்பா?’’ ஆச்சரியமாக கேட்டாள் கயல்விழி. ``அவங்க என்னோட முன்னாள் மனைவி. விவாகரத்தாகி ரெண்டு வருஷமாச்சு!’’ சொல்லிவிட்டு தனது இருசக்கரவாகனத்தில் புறப்பட்டு போன இளமதியனை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடியே நின்றாள் கயல்விழி

 

- நன்றி குமுதம்

LAST_UPDATED2