Home
கிச்சிடி PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Saturday, 29 September 2012 13:24



தேவையானவை

 

அரிசி  - ஒரு டம்ளர்
சிறு  பருப்பு  - கால் டம்ளர்
மிளகாய் தூள் - அரை  ஸ்பூன்
மஞ்சள் தூள் , உப்பு - தேவையான அளவு
பூண்டு                            - 2 துண்டு
நெய்                                - ஒரு ஸ்பூன்
எண்ணெய்                    - ஒரு ஸ்பூன்
வெங்காயம்                  - 1
தக்காளி                           - 1

செய்முறை

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கருவேப்பிலை போட்டு , விழுதாக்கிய பூண்டையும்  சேர்த்து வதக்கவும், பின்  நறுக்கிய வெங்காயம்,  தக்காளி, மஞ்சள் தூள் , உப்பு , மிளகாய் தூள்  சேர்த்து நெய்  ஊற்றி கிளறவும். இரண்டரை டம்ளர் நீர் ஊற்றி கழுவிய அரிசியை அதில் போட்டு குக்கரை மூடி வேக விடவும் இரண்டு அல்லது மூன்று விசில் வந்ததும் இறக்கவும். பரிமாறும்போது கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

 

Last Updated on Saturday, 29 September 2012 13:40