Home
பேச்சுலர் தோசை PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Saturday, 29 September 2012 13:07

தேவையானவை



மைதா   - 1/4 கிலோ
சர்க்கரை   -  ஒரு கப்
தேங்காய் துருவல்  - அரை கப்
உப்பு   -  தேவையான அளவு
முந்திரி     -  மூன்று
ஏலக்காய்   - இரண்டு



செய்வது சுலபம்

பேச்சுலர்கள்  அலுவகத்திலிருந்து அலுப்புடன் வந்ததும்  ஏதாவது  சுலபமாக சமைக்க வழி இருக்கிறதா?    என்று  அவர்கள் மனம் அலைபாயும். வீட்டில் மைதா மாவு இருக்கிறதா ? அதில் தோசை வார்க்கும்  பதத்திற்கு  நீர் ஊற்றி , உப்பு சர்க்கரை சேர்த்து கரையுங்க.ஏலக்காய் , முந்திரி இருந்தால் அதையும் அதில்  போட்டு கலக்கவும். தேங்காய் துருவலையும் உடன் சேர்த்து கரைத்து தோசையாக சுட்டு எடுக்கவும்.தொட்டுக்கொள்ள  எதுவும் தேவைபடாது. மொறு  மொறுவென்று சுவையாகவும் இருக்கும் .

Last Updated on Saturday, 17 November 2012 03:17