Home Cooking உருளைக்கிழங்கு வறுவல்
உருளைக்கிழங்கு வறுவல் PDF Print Email
Written by   
வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012 11:04
There are no translations available.

நம்ம வீடு ஆண்களுக்கு எப்பவுமே குசும்பு அதிகம். வகை வகையா சமைக்கும் போதெலாம் அதை தொட்டு கூட பார்க்க மாட்டாங்க ஆனா என்னைக்குபொறியல் இல்லையோ அன்னைக்கு தான் உண்ணா விரதம் இருப்பாங்க. இந்த மாதிரியான சூழ்நிலை எல்லா வீடுகளிலும் நடக்கும் .அந்த நேரத்தில் வெறுப்பை வறுத்து கொட்டாமல் உருளை கிழங்கை உதவிக்கு  கூப்பிட்டுங்க. உருளையை விரும்பாதவங்க பணத்தை விரும்பாதவங்க மாதிரிதான். பணத்தை விரும்பாத மனிதன் பிறந்திருக்கானா ? இல்லையே பிறகேன் கவலை தட்டுல பரிமாறின சாதத்துல குழம்பை ஊற்றி சாப்பிட சொல்லிவிட்டு , சமையலறைக்கு போங்க



தேவையானவை

உருளைக்கிழங்கு  - 1

மிளகாய் தூள் , மஞ்சள் தூள் உப்பு  - தேவையான அளவு ( கோபத்தில் அள்ளி கொட்டிடாதிங்க )
மிளகாய் தூளுக்கு பதில் சாம்பார் பொடி சேர்த்தாலும் தப்பில்லை.


பூண்டு  விழுது  - கொஞ்சம்
கருவேப்பிலை   - நிறைய

 

கருவேப்பிலை அதிகமாக சேர்க்கவும் ஏனெனில் அது தான் இந்த வறுவலை பிரகாசப்படுத்தும்.


எப்படி செய்வது

உருளை கிழங்கை தோல் சீவி, மெல்லிய துண்டுகளாக்கி கொள்ளவும்.   வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து கருவேப்பிலை, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் அதில் உருளைக்கிழங்கு , உப்பு , மஞ்சள் தூள் , மிளகாய் தூளையும்   சேர்த்து வதக்கவும். அவ்வளவு தான் உருளைக்கிழங்கு வறுவல் தயார். சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிபதற்குள்ளாகவே தயாராகிவிடும் உருளை வறுவல்.

LAST_UPDATED2