Home Cooking சைனீஸ் பிரைட் ரைஸ்
சைனீஸ் பிரைட் ரைஸ் PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Thursday, 27 September 2012 10:38



இந்த உணவுக்கு எதற்காக சைனீஸ் பிரைட் ரைஸ் என்ற பேர்  வந்ததென்று தெரியாது ஆனால் நம்மாட்கள் பொருள் பழையதாக இருந்தாலும் அதை புதிதாக செய்து தந்தால் எந்த பேர் சொல்லி கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள் . இந்த உணவு கோஸ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.

தேவையான பொருட்கள்

 

அரிசி    -  1/4 கிலோ
பாஷ்மதி அரிசி பயன்படுத்தினாலும் நன்றாக இருக்கும்
கோஸ்     -   மெலிதாக நீளமாக நறுக்கியது ஒரு கப்
பச்சை மிளகாய்   -1
பிரியாணி மசாலா   - 1 ஸ்பூன்

 

செய்முறை


அரிசியை குலையாமல் வேக வைத்துக் கொள்ளவும். கோஸை நூடுல்ஸ் போல நீளமாக மெலிதாக நறுக்கி கொள்ள வேண்டியது அவசியம்  .
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்த உடன், கோசை சேர்க்கவும் அதில் உப்பு மற்றும் பிரியாணி மசாலாவை சேர்த்து கிளறவும். கோஸ் அதிகம் வேககூடாது . பதமாக எண்ணெயில் வறுபட்டதும் அதில் சாதத்தை சேர்த்து கிளறவும்.இந்த சாதம் சாப்பிடுவதற்கு ஓட்டலில் சாப்பிடுவது போலவே அருமையாக  இருக்கும்.

 


குறிப்பு :


அரிசி விற்கின்ற விலையில் மீதமாகும் பழைய சாதத்தை வேதனையுடன் கொட்டுபவர்கள் கவனிக்கவும். பழைய சாதத்தை வீணாக்க வேண்டாம் .
இது போல பிரைட் ரைசாக்கி பரிமாறுங்கள். பழைய சாதமென்று நீங்கள் சொன்னால் தான் தெரியும்.

Last Updated on Friday, 28 September 2012 16:22