Home Cooking தக்காளி குழம்பு
தக்காளி குழம்பு PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Thursday, 27 September 2012 09:54

 

தக்காளி இல்லாத குழம்பு வகை உப்பிலாத பண்டம் குப்பையிலே என்பது போல தான்.  குழம்பின் சுவையை கூட்டுவது தக்காளி தான் என்று கூட சொல்லலாம். தக்களியிலேயே ஒரு குழம்பு வைத்தால் எப்படியிருக்கும் ? பிரமாதமாக இருக்கும் . இதை சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம் .

தேவையான பொருட்கள்

தக்காளி    - 1/ 2  கிலோ
பச்சை மிளகாய்   - 2
எண்ணெய்       - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் ,உப்பு    - தேவையான அளவு
பூண்டு                              - 10 துண்டு (விரும்பினால்  அதிக பூண்டை கூட சேர்த்துக் கொள்ளலாம் ஏனெனில் பூண்டு சேர்க்க சேர்க்க சுவையும் சேரும்
புளி      -     சிறு உருண்டை

 

செய்முறை

தக்காளி, பூண்டு , பச்சை மிளகாய்   ஆகியவற்றை வேகவைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த தக்காளியை மசித்துக் கொள்ளவும் . நிறைய நீர் சேர்க்க வேண்டாம். சட்னி பதத்தில் இருந்தால் நல்லது.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து , வெங்காயத்தை வதக்கிய   பிறகு  மசித்த கலவையுடன் உப்பு சேர்த்து அதில் புளிகரைசலை விட்டு கொதிக்க விடவும். இறுதியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

Last Updated on Thursday, 27 September 2012 10:20