Home Cooking கேரட் சாதம்
கேரட் சாதம் PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Thursday, 27 September 2012 09:31

குழந்தைகளுக்கு தினமும் டிபன் பாக்ஸில் எந்த உணவை சமைத்து கொடுப்பது என்று குழம்புபவர்களுக்கு கேரட் சாதம் புதுசாக இருக்கும்.

 


கேரட் சாதம்

அரிசி    -1/4  கிலோ 
வெங்காயம்  - 1
பச்சை மிளகாய்   -  1
கேரட்                        -  1
எண்ணெய்             -  தேவையான அளவு    
உப்பு                         -  தேவையான அளவு
கடலை பருப்பு , உளுந்து  - 1 ஸ்பூன்


விருப்பப்படுவோர் எண்ணெய்க்கு  
பதிலாக நெய்யைப் பயன்படுத்தலாம்.

செய்முறை

குக்கரில் அரிசியை குலையாமல் வேகவைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடிந்ததும் அதில் கடலை பருப்பு , உளுந்து போட்டு பொன்னிறமாக  வறுக்கவும்  . பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், அதோடு துருவிய கேரட்டை மஞ்சள் தூள் உப்பு, மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதிகமாக வெந்து விடவும் கூடாது . இறக்குவதற்கு முன் கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி சாதத்துடன் சேர்த்து கலக்கவும்.

Last Updated on Friday, 28 September 2012 16:27