Home Short Stories தேடி வந்த மாப்பிள்ளை
தேடி வந்த மாப்பிள்ளை PDF Print E-mail
Written by சி.பி.ராஜு   
Sunday, 26 August 2012 14:56

'இது ஒரு சொஜ்ஜி பஜ்ஜி கேஸ்' பையனை பார்த்தவுடனே மிருதுளா இந்த முடிவுக்குத்தான் வந்தாள்.

நகைச்சுவை நடிகர் செந்தில் போன்ற உருவம். குள்ளமாக, கருப்பாக, பல் எடுப்பாக இருக்கும் இவர் எதுக்காக பெண் பார்க்க வந்தார் என்றே அவளுக்குப் புரியவில்லை.

"பையனை உனக்குப் பிடிச்சிருக்காம்மா?" அப்பா கேட்டார்.

"இவர் எல்லாம் ஒரு மாப்பிள்ளைன்னு முடிவுபண்ணி எப்படி கூட்டிட்டு வந்தீங்கன்னே எனக்குப் புரியல" மிருதுளா வேதனையுடன் கேட்டாள்.

"ஸாரிம்மா, உனக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் மாப்பிள்ளை கிடைப்பதில் கஷ்டமா  இருக்கும்மா" வருத்தத்துடன் சொன்னார் அப்பா.

மாப்பிள்ளை முருகன் திடீரென்று அவர்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டான்.

"தங்கச்சி, கவலைப்படாதேம்மா. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க பெண் பார்க்க வரல. என்னுடைய ராசி என்னன்னா, நான் பெண் பார்க்க போற எல்லா இடத்திலேயும், வேற நல்ல மாப்பிள்ளை கிடைத்து, கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடும்.  அதனாலதான் உன்னையும் பெண் பார்க்க வந்தேன். உனக்கும் கூடிய சீக்கிரம் நல்ல மாப்பிள்ளை கிடைப்பார். நான் போயிட்டுவறேம்மா" சிரித்தபடி சொல்லிவிட்டு, செருப்பை மாட்டிகொண்டு கிளம்பினான் முருகன்.

Last Updated on Sunday, 26 August 2012 15:03