Home Cooking வெந்தய கீரை சாம்பார்
வெந்தய கீரை சாம்பார் PDF Print E-mail
Written by vaidegi balaji   
Wednesday, 22 August 2012 15:47

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு   - 1/4 கப்
புளி                        - சிறு உருண்டை
தக்காளி              -  2

சாம்பார் வெங்காயம்   - 5
வெந்தய கீரை                  - ஒரு கப் ( இலை மட்டும் )
பூண்டு                                 -  5 துண்டு

சமையல் எண்ணெய், கடுகு, மிளகாய் தூள் ,
மஞ்சள் தூள், உப்பு    - தேவையான அளவு  

 

செய்முறை


பருப்பை வேகவைத்து  பின் மசித்துக் கொள்ளவும் . கடாயில்  சமையல் எண்ணெய் விட்டு கடுகு போடவும்  , பூண்டு விழுதை நன்றாக  வதக்கி அதில் நறுக்கிய வெங்காயம் , தக்காளியை சேர்க்கவும் பிறகு வெந்தய கீரையை  வதக்கவும்     பிறகு உப்பு மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , சேர்த்து அத்துடன்  பருப்பையும், தேவையான அளவு தண்ணீரையும்   சேர்த்து கொதிக்க விடவும் .
இறக்குவதற்கு முன்பு புளிக்கரைசலை சேர்த்து கொதிக்கவிட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்

 

குறிப்பு

நாம் அன்றாடம் உண்ணும் எல்லா வகையான உணவிலும் ஏதோ ஒரு சக்தி நிறைந்திருக்கிறது.
குறிப்பாக வெந்தயக் கீரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடியது. அதே நேரம் வெந்தயம் கசக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கசப்பை எப்படி இனிமையாக உண்பது என்பதில் தான் சமைபவர்களின் சாமார்த்தியம் அடங்கியிருக்கிறது. மேற் சொன்ன முறையில் வெந்தயக் கீரையை சாம்பாராக செய்து கொடுத்தால் வெறுப்பவர்கள் மறுக்கப் போவதில்லை. முயற்சி செய்து பாருங்கள்.
வெந்தயக் கீரை  கிடைக்காதவர்கள், மண்  தொடியில் வெந்தயத்தை விதைத்தால் ஒரு வாரத்திற்குள் அருமையான இயற்கையான வெந்தயக் கீரை கிடைக்கும்

Last Updated on Wednesday, 22 August 2012 15:49