Home Cooking இனிப்பு போண்டா
இனிப்பு போண்டா PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Sunday, 17 June 2012 08:32

உறவினர்கள் வீட்டிற்கு வந்த உடனே அடித்து பிடித்து கடைக்கு ஓடுவது பழைய பாணி .
இருப்பதை  வைத்து அசத்தலாக சமைத்து அவர்களை அசத்துவது புது ஸ்டைல்.

தேவையானப்பொருட்கள்:
மைதா -    1/4   கிலோ
உப்பு     - சிறிதளவு
சர்க்கரை - தேவையான அளவு
தேங்காய்  - இரண்டு ஸ்பூன்
ஏலக்காய்  - ஒன்று
முந்திரி      - இரண்டு அல்லது மூன்று
நெய்           - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :
நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும் , அதில் மீதமான நெய் , தேங்காய்த் துருவல் , சர்க்கரை ,உப்பு ,ஏலக்காய் பொடி போன்ற பொருட்களை
மைதாமாவுடன் சேர்த்து தண்ணீர்  ஊற்றி போண்டா மாவு பதத்தில் பிசைந்துக்கொள்ளவும் . எண்ணையை சூடு செய்து அதில் சிறு சிறு போண்டாக்களாக போட்டு  பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இந்த மைதா இனிப்பு போண்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் .

Last Updated on Thursday, 28 June 2012 17:03