Home
வயலூரில் அறிவியல் திருவிழா PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Sunday, 17 June 2012 08:10

அட ஆச்சரியமாக உள்ளதே!
மாரியம்மன் திருவிழா, காளியம்மன் திருவிழா வயலூரில் நடந்தால் ஆச்சர்யப்படத் தேவையில்லை அதே சமயம் அங்கு அறிவியல் திருவிழா என்றால் நிச்சயம் ஆச்சர்ய பட வேண்டும் அதை அறிந்துகொள்ளவும் வேண்டும்.
கிரேட் லேக்ஸ் மேலாண்மை பள்ளியின் கர்மயோகா திடத்தின் கீழ் வயலூர் கிராமத்தை தேர்ந்தெடுத்து அந்த கிராம முன்னேற்றத்திற்காக மாணவர் ரவி சேகர் தலைமையில் மனிஷ் சிங் மற்றும் சுமன் ஆகிய மாணவர்கள் பல நற்பணிகளை செய்துவருகின்றனர்.அவற்றில் ஒன்றுதான் அரசினர் பள்ளியில் நடத்திய அறிவியல் திருவிழா.அறிவியல் என்பது அதிசயமானது அல்ல , அறவியல் நம் அன்றாட வாழ்வோடு இணைந்தது என்பதை தமிழ்நாடு அறிவியல் குழுவின் உறுப்பினரான திரு.தனஞ்சயன் அவர்கள் அரசினர் பள்ளியில் சாதாரண பாமரருக்கும் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கினார்.
ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது , செயல் முறையில் விளக்கும் செய்தியே பயனுள்ளதாகவும், மாணவர்கள் மனதிலும் பதியும் என்ற செய்தியை மெய்பிக்கும் வகையில் இருந்தது இத் திருவிழா.
படிக்கும் புத்தகத்தை தேடி நூலகம் தான் செல்லவேண்டும் என்ற நியதியை உடைத்து,தமிழ்நாடு சைன்ஸ் போரமில் வெளியான அறிவு சார்ந்த பல்வேறு அறிய புத்தகங்கள் மாணவர்கள் படித்து பயன்பெற பள்ளி வளாகத்தினுள் வைக்கப்பட்டது.தேவையானோர் தேவையான புத்தகத்தை எடுத்து படிக்கலாம் என்ற அறிவிப்பு பல மாணவர்களுக்கு அறிவியல் மட்டும்மல்லாது அறிவுப்பசியையும் தீர்த்தது
வேதியல் பக்கம்,இயற்பியல் பக்கம்,உயிரியல் பக்கம்,விளையாட்டு பக்கம் என்று தனி தனி பகுதியாக பிரித்து ஒவ்வொன்றின் சிறப்பியல்புகளையும் திரையிட்டு காண்பித்தனர்.
நீங்கள் கல்பாக்கம் பகுதியை சார்ந்தவரா ! இப்படி ஓர் அறிவு திருவிழா உங்கள் ஊர் பள்ளியிலும் நடைப்பெரவேண்டுமா
தொடர்பு கொள்ளுங்கள் .........
கிராமத்தை முன்னேற்ற காத்திருகிறார்கள் கிரேட் லேக்ஸ் மேலாண்மை பள்ளியின் கர்மயோகா குழுவினர்

Last Updated on Sunday, 17 June 2012 08:11