Home Social Topics கர்மயோகா கனவு
கர்மயோகா கனவு PDF Print E-mail
Written by கவிஞர் வைதேகி பாலாஜி   
Sunday, 17 June 2012 08:02

கனவு எல்லோருக்குமே சுகம் தரும், எல்லா கனவும் சுகம் தருமா என்றால் நிச்சயம் இல்லை. அதுவும் தங்களை சுற்றியுள்ளவர்களுக்கு சேவை செய்கின்றேன் என்றால் நம்பும்படியாகவா உள்ளது.அப்படி ஒரு கனவு காண ஆசிர்வதிக்கப்பட்டவர்களும் இருக்கின்றனர். தன்னிலை மறந்து அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. படிப்போடு அடுத்தவர்களுக்கு உதவும் பாக்கியமும் பெற்றவர்கள் கர்மயோகா மாணவர்கள் படிப்பு முடிந்து செல்கிறோம் என்ற சந்தோசம் முகத்தில் இல்லை மாறாக மனசுநிறைய சோகம்
அதற்கு காரணம் கர்மயோகாவுக்காக ஒதுக்கப்பட்ட கிராமமான மனமாய் கிராமத்தின் மகளிர் குழுவை சேர்ந்த பெண்களும், 25 குழந்தைகளும் கலந்துரையாட வந்திருந்தனர்.சொந்தங்கள் வீட்டிற்கு வந்ததை போல கர்மயோகா மாணவர்களுக்கு அத்தனை குதூகலம்.மகளிர் குழுவை சேர்ந்த சரஸ்வதி பேசுகையில் பிரிவு மிகப்பெரிய துயரம் கர்மயோகா மாணவர்கள் வாரம்தோறும் கிராமத்திற்கு வந்து விடுவார்கள் இனி அவர்கள் வரமாட்டார்கள் வருத்தமாக இருக்கிறது.இந்த ஒரு வருடத்தில் எங்களுக்காக எத்தனையோ நல்ல விசயங்கள் செய்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியும், சற்று துயரமும் கலந்த குரலில் சொன்னார்.பலருக்கு அவர்கள் திறமையை வெளிபடுத்த கிடைத்த அரங்கமாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மனமாய் கிராமத்தில் படமாக்கிய காட்சிகளை மாணவர் அபி திரையிட்டு காண்பித்தார் .அவர்களின் பிம்பத்தையும் ,பேட்டியையும் திரையில் கண்டு குழந்தைகளோடு பெண்களும் ஆனந்தமடைந்தனர்.கம்பியூடரின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாட்டையும் திரையிட்டு விளக்கினார் வயது வித்யாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெண்கள் வரை தயக்கமின்றி பாட்டு, விளையாட்டு, நடனமென அரங்கம் களைக்கட்டியது.சிற்றுண்டிக்குபிறகு அடுத்தவருட மாணவர்களை சந்திக்கும் மகிழ்ச்சியில் கிராம மக்கள் விட பெற்றனர்.

Last Updated on Sunday, 17 June 2012 08:03