Home
நடந்த நிகழ்வுகள். PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Wednesday, 23 May 2012 06:14

எழுத்தாளனுக்கு செல்லும் இடமெங்கும் சிறப்பு



அகமதாபாத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அகமதாபாத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவுக்குச் சென்றிருந்தேன். பரிச்சமில்லாத என் முகம் பார்த்தபிறகும் என்னை அன்போடு வரவேற்று என்னைப்பற்றி விசாரிக்க நான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிவிட்டு எனது இடைவெளிகள் நூலினை அவருக்குத்தந்தேன்.

என் கரம் பற்றி விழா மேடையின் முன்வரிசையில் அமர்த்தி தமிழ்சங்கத்தினுடைய தலைவர்
மற்றும் செயலாளருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

விழா தொடங்கியது நிறைய பேச்சாளர்கள் பேசி முடித்தார்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் திடீரென்று நமது அகமதாபாத தமிழ்சங்கத்திற்கு குமரிமாவட்டஎழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசய்யா வந்துள்ளார் அவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம் என்று என்னை மேடைக்கு அழைத்தார்கள்.
மேடைக்குச் சென்றபோது தமிழ்ச்சங்கத்தலைவர் திரு சாம்சிவன் எனக்கு பூச்செண்டு தந்து என்னை வரவேற்றார்.என்னால் மறக்க முடியாத நிகழ்வு அது.


கருணையுள்ள நாயகன்

நேதாஜி நற்பணிமன்ற ஆண்டுவிழா கூட்டத்தில் வாழ்த்தி பேசிவிட்டு வெளியேறுமுன் ஏழை எளிய மக்களுக்கு திரு வே. தேவராஜ் தேவா செக்யூரிட்டி பீரோ உரிமையாளர் அவர்கள் தையல் மெஷின்களை தனது சொந்த செலவில் வழங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு கை வலித்ததோ தெரியவில்லை திடீரென்று ஒரு ஏழைத் தாய்க்கு என்னைவிட்டு வழங்குமாறு பணித்தார்.

அந்த தாயின் புன்னகையில் நானும் சற்று புன்னகையோடு புகைப்படத்தில் இடம் பிடித்துவிட்டேன்.

வழங்குவதற்க்கு தகுதியில்லையென்றாலும் அந்த தாயின் வாழ்க்கை எதிர்காலம் புன்னகையோடு தொடர வாழ்த்திவிட்டு வழங்கினேன்.

இந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளிவந்தபோது அதை கத்தரித்து இணைத்திருக்கிறேன். தையல் மெஷின் செலவுகளுக்குச் சொந்தக்காரரான திரு வே. தேவராஜ் கம்பீரமாக எனது அருகில். அவரை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் புகைப்படத்தில் அவரது சட்டையில் க எழுத்து பதிவாகியுள்ளது.
அவரைப்பற்றி சொல்லப்போனால் நிறைய உதவிகள் செய்வதில் தாராள மனம் கொண்டவர். சமீபத்தில் ஒரு தந்தையில்லாத ஏழைப்பெண் திருமணம் என்று வந்துநின்றபோது ருபாய் ஐந்து ஆயிரம் தந்து உதவி செய்தவர். அவரது கருணை மேலும் மேலும் தொடர வாழ்துகிறேன்.
Last Updated on Sunday, 17 June 2012 07:48