Home Literature நேர்காணல்
நேர்காணல் PDF Print E-mail
Written by vaidegi balaji   
Monday, 07 May 2012 12:56

 

- வைதேகி பாலாஜி

 

நேர்காணல் : பேராசிரியர் ஸ்ரீராம்

 

 

நுழைவாயில்

அறிவும் அடக்கமும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்காது , இப்படி ஒரு பொருத்தம் யாராவது ஒரு சிலருக்கு தான் அமையும் ,அப்படியே அமைந்தாலும் அந்நபர் சாதாரண பொறுப்பிலிருப்பார்.அன்போடும் அடக்கத்தோடும் , அறிவோடும் பணிவோடும் உயர்பதவி வகிக்கும் ஒரு நபர் இருக்கிறார் . பேருக்கும் குணத்திற்கும் யாருக்கும் சம்பதம் இருக்காது இவருக்கு இருக்கிறது. அவர் வேறு யாருமல்ல ,  சமுதாயத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்துடன்  27 வருடங்களுக்கு மேலாக கல்விப்பணியில் முழுமையுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் பேராசிரியர் .ஸ்ரீ ராம் அவர்கள் தான் .
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வியையும் , சென்னையில் இளநிலை பட்டப்படிப்பையும் , முதுநிலை கல்வியை மும்பை நகரிலும் படித்துவிட்டு இருபது வருடங்களுக்கு மேலாக மும்பையில் பணிபுரிந்தார். தற்போது சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ்  மேலாண்மைப்பள்ளியில் எக்சிகியுட்டிவ் டைரக்டராக பணிபுரிகிறார்.

நன்றி மறவாதவர்


கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது இவருக்கு பொருந்தும்.பேர் புகழுக்கு ஆசைப்படாத ஒருவர் இவர் என்றும் சொல்லலாம்.ஒரு வருடத்திற்கு முன்பு மாத இதழுக்காக அவரை சந்திக்க சென்றிருந்தேன் சுமார் ஒரு    மணி நேரம் தன் கல்வி அனுபத்தை பகிர்ந்துகொண்டார் . இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதுவரை அந்த புத்தகத்தை அவர் வாங்கி பார்க்கவில்ல்லை அதோடு மட்டுமல்லாமல் அதைப் பற்றி இதுவரை விசாரிக்கவும் இல்லை. ஏற்றி விடும் ஏணியை உயரத்திற்கு போனதும் மறந்துவிடும் இந்தஉலகத்தில்   தன் ஒவ்வொரு பதிலிலும் அவர் உயர காரணமானவர்களை நன்றியோடு நினைவுகூற்கிறார்.
அவரை கிரேட் லேக்ஸ் மேலாண்மை  பள்ளியின்   செயல் இயக்குநராக தேர்ந்தெடுத்த அதன் தாளாளர் டாக்டர். பாலா பாலசந்திரன் அவர்களைப்பற்றியும் ,S.P.  ஜெயின்மேலாண்மை  பள்ளியின் தாளாளர் டாக்டர் ஸ்ரீகாந்த் அவர்களைப்பற்றியும் குறிப்பிடுகிறார்.

 

பூர்வீகம்
அழுத்தமாகவும் , திருத்தமாகவும் , விரைவாகவும் , கனீர் குரலிலும்  பேசுவதில் வல்லவர். கன்சல்ட்டண்டாக தன் பணியை தொடங்கிய இவரை கல்வி துறையில் ஈடுபடுத்தியதின் முழு பெருமையும் டாக்டர் ஸ்ரீ காந்த் அவர்களையே சாரும் என்று நன்றியோடு  நினைவு கூறுகிறார். தஞ்சாவூரை பூர்விகமாக கொண்டவர் , இவரின் மனைவி திருமதி . ஜெயஸ்ரீ , மற்றும்  அமெரிக்காவில் படிக்கும் மகளென அளவான குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிரார். இந்த நேர்காணல் தமிழ் டைஜிஸ்ட்  வாசகர்களுக்கு மட்டுமல்லாது,உலகம் முழுவதுமுள்ள   உயரத்துடிக்கும் தமிழர்களுக்கு பாடமாகவும் இருக்கும்.

 

 

இனி அவருடைய அனுபவங்கள் ....

 

 


எம்.பி .ஏ - வில் மார்க்கெட்டிங் படிசிருகீங்க, பொதுவா நிறுவனங்களில் வேலை பார்க்கத்தான் ஆசைப்படுவாங்க , நீங்க எதனால் கல்வி பணியை தேர்ந்தெடுத்தீங்க ?


நீங்க சொல்றது ரொம்பவே சரி.முதல்ல டாக்டர் ஸ்ரீ காந்த் தலைமையில் கன்சல்டிங் வேலை பார்த்துட்டிருந்தேன்  பிறகு அவர் மும்பையில இருக்கிற சப் ஜெயின் கல்லூரியில தாளாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இப்ப வரைக்கும் சம்பளமே இல்லாமத்தான் வேலைப்பார்கிறார். அவருக்கு டீச் பண்றதுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன்.1990  ல அதே கல்லூரியில 'பேகல்டி' உறுப்பினராக சேர்ந்தேன்.படிப்படியாக டீச் பண்ணவும் ஆரம்பிச்சேன்.

..நீங்க பண்ண முதல் டீச்சிங் நினைவிருக்கா ?


மார்க்கெட்டிங் ஸ்டேடஜி சம்பந்தப்பட்டது.நீங்க டீச்சிங் பண்றதுக்கான துறையை தேர்ந்தெடுத்து படிகல,அதனால் டீச்சிங் அனுபவம் எப்படி இருந்தது ?


டாக்டர் ஸ்ரீ காந்த் கூட இருந்தது நூறு phd  படிச்சதுக்கு சமம் ஏன்னா என்னைப்பொருத்தவரைக்கும் இந்தியாவிலேயே  மேலாண்மையில் சிறந்த பேராசிரியர் அவர் தான் .அவருடன் வேலைப்பார்ததில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது டீச்சிங் அனுபவம் உத்வேகமாகவும் ,சவாலாகவும் இருந்தது.

சவால் என்றால் எந்த வகையில்
S.P.  ஜெயின்ல படிக்கறவங்க திறமையாகவும் புத்திசாலியாகவும் இருப்பாங்க அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல தயாரா இருக்கணும் அது சவாலாக இருந்தது .

நான் சென்னையில் குடியேற காரணம் டாக்டர். பாலா தான்சென்னை வருகையைப்பற்றி சொலுங்க ?


2004ஆம் வருடம் ஏப்ரல் 6 ஆம் தேதி கிரேட்லேக்ஸ்சில் சேர்ந்தேன் .

உலகத்தின் நெம்பர் -1 மேலாண்மைபள்ளியான கெலாக்ஸ்சின் பேராசிரியர் டாக்டர் பாலா கலந்துரையாட  கோதேரேஜின் தலைமை அலுவகத்துக்கு என்னை அழைத்திருந்தார் .  நான்  கடந்த 21 வருடமாக, வேறு பணி தேடி விண்ணப்பித்ததில்லை.வாய்ப்பு என்னைத்தேடி வந்தது .ISB ஹைதராபாத் ,MDI -குர்கோன் போன்ற சிறந்த மேலாண்மை பள்ளியின் தாளாளராக பொறுப்புவகித்தவர் பாலா அவர்கள்,என்னை பேச அழைத்ததும் ஏன்,எதற்கென்றேல்லாம்  நான் கேட்கவில்லை.அவர் அழைத்தார் என்றதும் உடனே போனேன்.அவர் சென்னையில் துவங்க உள்ள கிரேட் லேக்ஸ் மேலாண்மை பள்ளியியை நிர்வகிக்கும் பணிக்கு என்னை தேர்ந்தெடுத்ததாக கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.எந்த அடிப்படையில் என்னை தேர்ந்தெடுத்தீர்கள் என்றதற்கு அவரே விளக்கினார்.மூன்று பேர் இறுதி பரிசீலனையில் உள்ளனர். இறுதியாக உங்களைத்தான் தேர்வு செய்துள்ளோம் ஏனென்றால் SP. ஜெயின் கல்லூரியுடன் நீங்கள் இணையும்போது அந்த கல்லூரி மும்பையில் கூட அதிக பிரபலமில்லாமல் இருந்தது ஆனால் இப்போது இந்தியாவில் சிறந்த 10 கல்லூரிகளில் அதுவும் ஒன்று,இத்தகைய வளர்ச்சியை உடனிருந்து கவனித்தவர் நீங்கள் ,அதில் உங்கள் பங்களிப்பும் உண்டு ,இளமையானவங்க தேவை ( அப்போது அவருக்கு 41 வயது தான் )அதுமட்டுமல்லாமல்  இரண்டு வருட எம் பி.விற்கு  பொறுப்பு வகிசிருகீங்க,லீடர்ஷிப் திறமை,போன்ற வரிசையில் ஆராய்ந்தோம் அதோடு சென்னையோடு தொடர்புடையராக இருக்கவேண்டுமேன்பதிலும் கவனம் செலுத்தினோம் என்று கூறினார்.

 

உங்கள் குடுபத்தவர்கள் சென்னைக்கு மாற்றலாவதை வரவேற்றார்களா ?


என் மனைவி டெல்லியில் வளர்ந்தவங்க , மும்பையில் 17 வருடமாக வேலப்பார்த்திருக்கறாங்க, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  மும்பையை போல ஒரு பாதுகாப்பான இடம் வேறங்கும் இல்லைன்னு சொல்லலாம்,அதனோட இன்னொரு சிறப்பு மும்பையில் கருப்பா ,சிவப்பா, குள்ளமா ,உயரமா ,ஆனா ,பெண்ணா இப்படியெல்லாம் பாகுபாடு பார்க்கமாட்டாங்க. திறமையை மதிப்பாங்க அதனால் அவங்களுக்கு மும்பை தான் பிடிக்கும். சென்னை வந்து மூன்று வருடத்திற்கு பிறகும் அவங்களுக்கு சென்னை ஒத்துவரல.என் மகளுக்கு சென்னை வரும்போது தமிழ் பேச கூட தெரியாது அதனால் இந்தி பேசக்கூடியவர்கள் அதிகமுள்ள கேந்திர வித்யாலயாவில் தான் முதலில் சேர்த்தோம் .

 

 

கிரேட் லேக்ஸ்- யில் டைரக்டராக பொறுப்பு வகிக்கும் பணி உங்களுக்கு மனநிறைவைத்தருகிறதா  ?


நிச்சயமா ஆரம்பித்து ஆறு வருடத்திற்குள் சிறந்த 20 இடத்தில் ஒன்றாக கிரேட் லேக்ஸ் வளர்ந்துள்ளது இது பெரிய சாதனை.முதல் நான்கு வருடத்தில் விரிவுரையாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு , மாணவர் சேர்க்கை ,  மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ,போன்ற எல்லா துறையையும் நான் தான் கவனித்தேன் ஏனெனில் அப்போது இரண்டு, மூன்று விரிவுரையாளர்கள் மட்டும் தான் பணிபுரிந்தனர்.இதோடு விரிவுரையாளர் பணியையும் செய்தேன். ஏம்பா கஷ்டப்படற .டீச்சிங் பண்ணலையினா  பரவாயில்லை, மத்ததை கவனிப்பா, டீச்சிங் யார் வேண்டுமானாலும் பண்ணலாம் ஆனா நீ செய்யற வேலையை யாரும் பார்க்க முடியாது என்று பாலா சார் சொல்வாங்க.என்னைப் பொறுத்தருத்தவரைக்கு   டீச்சிங் தான் என்  பர்ஸ்ட் லவ் . என்னைக்கும் அதை நிறுத்த மாட்டேன்.

 

அப்துல் கலாம் அவர்களின் ஆச்சர்யம்

 

இரண்டு வருட எம் .பி.ஏ படிப்பை ஒரே வருடத்துல எப்படி படிக்க முடியும் ?எனக்கு ஆச்சர்யமா இருக்கு, எனக்கு மட்டுமல்ல , மரியாதைக்குரிய அப்துல் கலாம் கிரேட் லேக்ஸ் மாணவனிடம் என்னப்பா ஒரே வருடத்துல எம்.பி.ஏ, படிப்பை  படிச்சிடரியா என்று ஆச்சர்யத்துடன் கேட்டிருக்கார்


இரண்டு வருடம் படிக்கறவங்க மொத்தமா வகுப்பறையில் படிக்கறது 17  மாதம் தான்.அதை நாங்க இன்னும் குறிகிய காலத்துல படிச்சி முடிக்கற மாதிரி வடிவமைத்து இருக்கோம். நிறுவனங்களில் ஏற்கெனவே மூன்று ,நான்கு வருடமாவது அனுபவம் உள்ளவர்களை தான் நாங்க தேர்ந்தெடுக்கிறோம் .அதனால் மாணவர்களின் தரமும் அதிகமாக இருக்கு. நான் 2 வருடம் எம். பி.ஏ படிக்கும் மாணவர்களிடம் டீம் வொர்க் பத்தி பாடம் நடத்தினால் அது அந்த மாணவனுக்கு வெறும் பாடமாகத் தான் இருக்கும் ஆனா எங்க மாணவர்களுக்கு அந்த பாடம் உடனே புரியும் ஏனென்றால் அவர்களுடைய வேலை அனுபவத்தை பாடத்தோடு ஒப்பிட்டு பார்ப்பாங்க.அதனுடைய முக்கியத்துவமும் புரியும் .பாலா அவர்கள் சொல்லுவார் 'Money Value of time' அப்படின்னு அதாவது ஒரு மாணவன் அவனுடைய வேலையை இராஜினாமா செய்துவிட்டு வந்தால் இரண்டு வருடத்திற்கு அவனுக்கு 10 இலட்சம் நஷ்டம் ,படிப்பிற்கு ஒரு 5 இலட்சம் மொத்தம் 15 இலட்சம்.அவனுக்கு விரையமாகும், அதே சமயம் ஒருவருடம் படித்தால் 5 இலட்சம் இலாபமாகும்

.

இந்த ஒரு வருட எம் பி.ஏ- வின் சிறப்பு பற்றி சொல்லுங்க ?


தமிழ் நாட்டில் நாங்க தான் முதல் முதலாக தொடங்கியது . இந்தியாவில் இரண்டாவதாக தொடங்கினோம்.

 

உங்களுடைய கல்விக்கு உங்கள் மகள் படிக்கும் கல்விக்கும் வித்தியாசம் இருக்கிறதா ? ஏன்னா குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே Pre.K.G சீட் வாங்க வரிசையில் நிற்க வேண்டிய நிலையில தான் இன்றைய சமுதாயம் இருக்கு .


நிச்சயமா வித்யாசம் இருக்கு ஏன்னா ,முன்பெல்லாம் ஆசிரியர்களுக்குன்னு சமுதாயத்துல ஒரு தனி மரியாதை இருந்தது,நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள். இப்ப நிறைய பள்ளிகள் இருக்கிறது ஆனால் ஆசிரியர்களுக்கான மரியாதை தான் இல்லை.ஆசிரியர் வேலைக்காக பொருளாதார ரீதியாக தியாகம் பண்ண வேண்டியிருக்கு.அதனால் புத்திசாலியான மாணவர்கள் ஆசிரியர் துறையை தேர்ந்தெடுப்பதில்லை .

கல்வி பணியில் படி, படியாக முன்னேறி கல்வி கூடத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வகிக்கும் நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் . இந்த நிலையை மாற்ற வழி உள்ளதா ?


மாற்றத்தை கொண்டுவர முடியும். உடனடியாக முடியாது . கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றம் வரும் .அரசாங்கம் கல்வியாளர்கள் மேல் மரியாதையும் ,அக்கறையும் செலுத்தனும் அதோடு அரசாங்கம் மட்டுமே நாட்டின் கல்வி தேவையை பூர்த்தி செய்ய முடியாது அதனால் தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைக்கணும் .

 

தனியார் பள்ளியினர் கல்வி கட்டணத்தை உயர்த்திட்டாங்க , அதை வியாபாரமாக்கிட்டாங்க என்று தானே அரச்சாங்கமே கட்டணத்தை நிர்ணயிக்கிறது ?
அது தவறு. எல்லா தனியார் நிறுவனங்களும்  ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க .IIT,IIM எல்லாம் அரசாங்கம் தொடங்கியதுதான் அதை மறுக்கல ஆனால் அதே சமயம் ஒரு கல்வியாளர் சொல்கிறார் நம் நாட்டில் திறமை உள்ளது அதை வெளிப்படுத்த கல்வி தேவை அதற்கு இன்னும் 400 பல்கலைகழகங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்
அது அரசாங்கத்தால் மட்டும் முடியாது . அரசாங்கத்தின் விதி முறைகளை பின்பற்றுதலோடு தனியார் நிறுவனங்களும் வரவேண்டும்.

 

கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்

இன்றைய கல்வி தரமாக இருக்கிறதா ?
இல்ல . இந்தியாவுல மேலாண்மை பள்ளிகள் 3000 திற்கும் மேல இருக்கு அதுல முதன்மையா இருக்கற 100 பள்ளிகளை தவிர மீதி இருக்கிற 2900 பள்ளிகள் தரம் குறைந்தவைகளாக தான் இருக்கு.

 

கல்வியின் தரத்தை உயர்த்த யார் முயற்சிக்க வேண்டும் அப்படியே முயற்சித்தாலும் திட்டம் வெற்றி பெறுமா ?


கண்டிப்பா முடியும் . இப்ப பார்தீங்கனா , IIM,IIT -கள் பல இருக்கு . அங்கு தரமான பேராசிரியர்கள் இருக்காங்க .புத்திசாலியான நிறைய மாணவர்கள் வசதி இல்லாமா படிக்காம இருக்காங்க. அந்த பேராசிரியர்கள் அங்க போய் தான் பாடம் நடத்தணும் என்றில்ல . அறிவியல் வளர்சியால் எத்தனையோ வழி இருக்கு தொலைத்தொடர்பு  மூலமா அவங்க பாடத்தை மத்தவங்களுக்கு கற்பிக்கலாம் .இதனால் அவங்களுக்கு நேரமோ ,பொருட்செலவோ ஆகப் போறதில்ல .இதனால கட்டாயம் கல்வி தரம் உயரும்.அதுக்கு அரசாங்கமும் ,கல்வி இயக்குனர்களும் , அரசியல் தலைவர்களும் , மந்திரிகளும் இது போன்ற நல்ல திட்டத்தை  எல்லாத்தரப்பினர்களும் வரவேற்க  முன்வரவேண்டும் .பத்து IIT க்கு  மேல சென்னையில் ஆரம்பிக்க முடியாது ஆனா ஒரு 100 கல்லூரிக்கு உதவி செய்யலாம்..தொழில் நுட்பத்துல இந்தியா முக்கிய இடம் வகிக்கறதா சொல்லிக்கிறோம் அதை நம் நாட்டு  மக்களுக்கு கல்வி கொடுக்கறதுக்கு பயன்படுத்தணும் .அதை நாம அமல் படுத்தலன்னா சீனாவோ , பிராசிலோ , தென் ஆப்ரிக்காவோ பயன்படுத்திக்குவாங்க .

இவரது கல்வி பணியை கௌரவித்த விருது

 

 

AIMS என்ற அமைப்பு மேலாண்மை பள்ளிகளில் சிறந்த இயக்குனராக தேர்ந்தெடுத்திருக்கிறது அதைப்பற்றி சொல்லுங்க


AIMS- பல துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்கி இருக்காங்கஇந்த அமைப்பு  இந்தியாவிலுள்ள மேலாண்மை பள்ளிகளில் சிறந்த இயக்குநரை தேர்ந்தெடுத்து விருது வழங்குவது இதுதான் முதல் முறை . அந்த விருது எனக்கு கிடைச்சிருக்கு.

எளிமையானவர் , எதார்தமானவர் , நிர்வாக முடிவுகளை துரிதாமாக எடுப்பதில் சிறந்தவர் , யார் எவர் என்று மனிதர்களை பார்த்து மதிப்பிடாமல் , திறமையையும் ,வேலையையும் மதிப்பிடுபவர் . திட்டம் தீட்டி கிடப்பில் போடாமல் , அதை உடனே செயல்படுத்துவதில் கெட்டிக்காரர் இப்படியான் தலை சிறந்த குணங்களை எப்படி வளர்த்து கொண்டீர்கள் ?
மூன்று வழியில்
ஒன்று பெற்றவர்கள் மூலம் ,அடுத்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்,அடுத்து என் குருக்கள் , டாக்டர் ஸ்ரீ காந்த் காந்தியவாதி ஒரு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தார்,அடுத்தது டாக்டர் பாலா, ஒரு இந்தியனுக்கு அவ்வளவு பேரும், புகழும் அமெர்க்காவிலுள்ள கெலாக் மேலாண்மை பள்ளியில் கிடைத்திருக்கின்றதென்றால் சாதாரண விசயமல்ல இத்தகைய உயர்ந்த குனமுள்ளவர்களின்  தலைமையில் வேலைப்பார்த்ததால் அவர்களுடைய கொள்கைகள் ,பண்புகள் தன்னாலே எனக்குள் உருவேறிவிட்டது.

இப்படியான சூழல் இல்லாவிட்டாலும் நீங்க நீங்களாகத்தான் இருந்திருப்பீங்க , ஏன்னா ,நான் உங்களுடன் உரையாடி கொண்டிருக்கும் இந்த ஒரு மணி நேரத்தில் உங்களைப் பற்றிய செய்தியை அறிந்ததை விட டாக்டர் ஸ்ரீ காந்த் , டாக்டர் பாலா வைப் பற்றி தான் அதிகம் அறிந்து கொண்டேன் .

பேசறதுக்கு நல்லா இருக்கிறது என்பதற்காக  மத்தவங்களை உயர்த்தி பேசறதில , எந்த ஒரு  தனி மனிதனின் வளர்ச்சியும் தனியாக உருவானதில்லை . வெற்றியில ஒரு பங்கு தான் நம்மோடது , மத்தவங்க உதவி , ஆசிர்வாதம் ,எல்லாமே இருந்தாதான் முன்னேறமுடியும் .

மேலதிகாரிகளிடம் மட்டுமல்ல .எனக்கு கீழ வேலைப் பார்க்கறவங்ககிட்ட இருக்கிற நல்ல விசயங்களையும் கூட நான் நிறைய கத்துக்கிட்டேன். என் டிரைவர் ,பியூன் இவங்கக்கிட்ட இருக்கின்ற நற்பண்புகளை நாம ஏன் கடைப்பிடிக்க கூடாது என்று நினைப்பேன்.

சுயநலமாக இருக்கணும்

 

 

நாம நாமா இருக்கறது வந்து ரொம்ப கஷ்டமான விஷயம் , நேரத்துக்கு தகுந்த மாதிரி பச்சோந்தி வேடம் போடறவங்க அதிகம் . உடன் வேலை பார்க்கரவங்களை வா , போ என்று மரியாதை குறைச்சலா கூப்பிடு தங்கள் தரத்தை தாழ்த்திக்கொள்கின்ற கிழ்த்தரமான பணியாளர்கள் தான் அதிகம் . நீங்க எப்படி நீங்களாக இருக்கறீங்க ?

உங்க கீழ் வேலப்பார்கரவங்களை திட்டறதும் ,அவமதிக்கறதும் , அவர்களை மரியாதை குறைச்சலாக நடத்தறதும் பெருசில்ல , நிஜமாகவே தைரியமும் , துணிச்சலும் இருந்தா ,உனக்கு மேல இருக்கறவங்கல கேட்கணும்.யாராக இருந்தாலும் எதிர்மறையான கருத்தை ஆமோதிக்காம அதன் குறைகளை சுட்டிக்காட்டுவேன்,அதனால் நான் சண்டைபோடுறேன் என்று கூட சொல்வார்கள்.
பேசறது, செய்யறது, செய்கை இப்படி எல்லாமே வேறு பட்டிருந்தா அந்த நபர் தன் மனநிம்மதியை இழந்துடுவாங்க .அதனால் மனதுக்கு சரி என்று பட்டதை சரியை சரியா செய்யணும் . அப்பதான் நிம்மதியுடன் இருக்க முடியும்.மத்தவங்ககிட்ட சராசரியா நடந்துக்கறது நமக்கு மன நிம்மதியை தரும். அதனால் இது ஒரு வகையில் சுயநலமும் கூட.நீ நிம்மதியா இருக்கணும்னா சுயநலமா இரு.

 

 

உங்களுடைய கனவு ?


என்னுடைய கனவு கிரேட் லேக்ஸ்- சுடன்  தொடர்புடையதாகத்தான் இருக்கும் .இந்தியாவில்
சிறந்த இருபது மேலான்மைபள்ளிகளில் ஒன்றாக இருக்கின்ற  கிரேட் லேக்ஸ் இன்னும்  ஐந்து வருடத்தில் சிறந்த 10 துல வரணும் அதற்கடுத்த ஐந்து வருடத்தில் சிறந்த சிறந்த ஐந்து இடத்தில் ஒன்றாக இருக்கணும் .


முதலிடத்தின் மேல் ஆசை இல்லை


முதலிடம் வேண்டாமா ?


ஒன்றிலிருந்து ஐந்து  வரை இடம்பிடித்திருக்கும் கல்லூரிகளில்  பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.அதனால் ஒன்றிலிருந்து ஐந்து வரையனா இடத்தில் ஒன்று கிடைத்தால் போதும் .


உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் .

  

  Last Updated on Saturday, 16 June 2012 11:48